வர்த்தகம்

நோய் கிருமிகளை நீக்க புறஊதா கருவிகள்: கோவையில் அறிமுகம்

கோவை, செப். 16

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லேசர் கிராப்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் நோய் தொற்று நோய்க் கிருமிகளை நீக்க தனித்துவமான புற ஊதா தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.எஸ்.சசிகுமார் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள கோவிட் 19 தொற்று சூழ்நிலையில், வைரஸ்கள் மற்றும் கிருமிகள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு சுத்திகரிப்பு தீர்வுகளை பயன்படுத்துகிறோம். இருப்பினும் நாணயங்கள், மருத்துவக் கருவிகள், நகைகள், பணப்பைகள், மொபைல் போன்கள், முக கவசம் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் இருந்து மீண்டு வர எல்சிடி -யுவி ஸ்டெர்லைசர் அல்லது புவி, கிருமி நாசினி கேபினட், யுவி புட் மேட், ஸ்டெர்லைட் ஸ்டெர்லைசிங் சேம்பர், யுவி ஸ்டெர்லைசிங் டன்னல் கன்வேயர் போன்ற 13 வகையான தயாரிப்புகளை அறிமுகம் செய்து உள்ளோம். யுவி ஸ்டெர்லைசிங் சேம்பர் காய்கறிகள், பழங்கள், முககவசம் ஆகியவற்றில் உள்ள கிருமிகளை புற ஊதாக்கதிர்கள் மூலம் 99% அழிக்கிறது. விமான நிலையம், பஸ் நிலையம் ஆகியவற்றில் யுவி ஸ்டெர்லைசிங் டன்னல் கன்வேயர் மூலம் கிருமிகளை புற ஊதா கதிர்கள் மூலம் அழிக்கிறது. நிறுவனம் என்ஏபிஎல் அங்கீகாரம் பெற்றுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *