செய்திகள்

இந்தியாவில் அதிக விற்பனையாகும் ‘‘டிவிஎஸ் ஸ்கூட்டி’’, ‘‘ஸ்கூட்டி பெப்’’: பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

Spread the love

சென்னை, செப். 21

3 சக்கர வாகனம் மற்றும் 2 சக்கர வாகன உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றுத் திகழும் டிவிஎஸ் நிறுவனம் தனது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் (பிளஸ்) வாகனத்தில் ’மேட்’ எடிஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’கோரல் மேட்’ மற்றும் ’அக்வா மேட்’ என்ற இரு கவர்ச்சிகரமான வண்ணங்களில் இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

3டி எம்ப்ளம், அசத்தலான புதிய கிராபிக்ஸ், பிரீமியம் தரத்திலான அழகான இருக்கை உள்ளிட்டவை இந்த வாகனத்திற்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

இவ்வாகனம் இந்தியாவில் முத்திரைப்பதித்த, மிகச்சிறந்த, அதிக வரவேற்பைப் பெற்ற இரு சக்கர வாகனமாகும். இதன் வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, நடப்பாண்டில் தனது 25-வது ஆண்டை உற்சாகமாக கொண்டாடுகிறது.

கவர்ச்சிகரமான ரேஞ்ச், மிக உயர்தரம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீதான அக்கறை இவற்றுடன் இந்திய இளம் பெண்களுக்கு அவசியமான அம்சங்களைப் பூர்த்தி செய்தது மூலம் இந்த மாபெரும் மைல்கல்லை எட்டியிருக்கிறது. நுகர்வோரிடம் ஏற்பட்ட நிகரில்லாத உறவினால், இந்தியாவில் பெண்களின் போக்குவரத்து பயன்பாடு என்பதற்கு மறு சொல்லாக ‘டிவிஎஸ் ஸ்கூட்டி’ என மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. மேலும் டிவிஎஸ் ஸ்கூட்டி, தனது வாடிக்கையாளர்களின் தேவைகள், எதிர்பார்புகளை, தனது ஒவ்வொரு புதுமையான அம்சங்களின் மூலம் ஒவ்வொரு வகையிலும் பூர்த்தி செய்திருக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்(பிளாஸ்), 87.8 சிசி காற்று குளிர்விக்கப்பட்ட ஒற்றை சிலிண்டர் எகோ தர்ஸ்ட் என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் 4.9 பிஎஸ் பவர் மற்றும் 5.8 என்எம் இழுவிசைத்திறன் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த எகோ தர்ஸ்ட் என்ஜின் நீண்ட உழைப்பைக் கொடுக்கக் கூடியது என்பதுடன் எளிதில் பழுதடையாத, மிக சொகுசான பயணத்தை நுகர்வோருக்கு வழங்குகிறது. சாலையில் செல்லும் போது ஏற்றங்கள் வந்தால் அதன் மீது இடிக்காமல் செல்ல உதவும் வகையில் சற்றே உயரமான வடிவமைப்பை கொண்ட கிரவுண்ட் ரீச்சபிளிட்டி அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆகியவை சமதளம் இல்லாத மேடுப்பள்ள பகுதிகளிலும் வசதியான, சொகுசான பயணத்தை ஏற்படுத்தித் தருகின்றது.

மொபைல் போன்கள் சார்ஜருக்கான வசதி, சைடு ஸ்டாண்டு அலாரம், இருக்கைக்கு அடியில் பொருட்கள் வைக்கும் இடவசதி, டிஆர்எல்-கள், திறந்த கையுறைப் பெட்டி உள்ளிட்டவற்றுடன் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் காப்புரிமை பெற்ற, சுலபமாக ஸ்டாண்டை போட உதவும் ஈஸி ஸ்டாண்ட் தொழில் நுட்பத்துடன் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ்-ன் ஈஸி ஸ்டாண்ட் தொழில் நுட்பம் மத்தியில் உள்ள ஸ்டாண்டை போடுவதில், வாடிக்கையாளர்களுக்கு உள்ள சிரமத்தை 30 சதவீதம் குறைகிறது. குறிப்பாக பெண்கள் பள்ளி குழந்தைகளை பள்ளிகளில் காலையில் இறக்கி மாலையில் திரும்ப கூட்டி வர மிக உபயோகமாக உள்ளது என்றனர்.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வசதியாக 7 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 47,026 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *