வர்த்தகம்

மகளிர் விருப்பமான டி.வி.எஸ். ஸ்கூட்டி பொங்கலுக்கு புதிய ‘முதல் காதல்’ ஸ்கூட்டர் அறிமுகம்

சென்னை, ஜன. 12

மகளிர் விருப்பமான டி.வி.எஸ். ஸ்கூட்டி மினி ஸ்கூட்டர் 30வது ஆண்டு விழாவையொட்டி பொங்கலுக்கு புதிய ‘முதல் காதல்’ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.56 ஆயிரம் ஆகும் என்று இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு தெரிவித்தார். டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரை லிமிடெட் எடிஷன் இது. இந்தியாவின் குறைந்த விலையிலான, உயர்தர ஸ்கூட்டராக திகழும்.மனதைக் கவரும் தனித்துவமான தோற்றம்.

குறைந்த அளவில், குறிப்பிட்ட காலம் மட்டுமே விற்பனைக்கு வரையறுக்கப்பட்ட இந்த ’முதல் காதல்’ பதிப்பு, கண்களைக்கவரும் புதிய வண்ணம், மனதைக் கவரும் க்ராபிக்ஸ், முப்பரிமாண (3டி) சின்னம் மற்றும் முதல் முறையாக தமிழில் லோகோ என புத்தம் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது.

30 ஆண்டுகளாக டி.வி.எஸ் ஸ்கூட்டி தமிழ்நாட்டு மக்களின் பல்வேறு போக்குவரத்துத் தேவைகளுக்கான முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. புதிய பதிப்பில் அதன் முத்திரைச் சின்னம் (லோகோ) தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் சின்னத்தை வடிவமைத்திருப்பது இரு சக்கர வாகனத் தொழில் துறையில் இதுவே முதல் முறை ஆகும்.

டிவி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இதன் மூலம், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் நீண்ட கால உழைப்பு, தங்கு தடையில்லாத இல்லாத செயல்பாடு மற்றும் சவுகரியமான வாகன சவாரியை உறுதி செய்கிறது. இத்துடன் 15% அதிக மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறனையும் அளிக்கிறது. இதனால், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ், இந்தியாவின் மலிவு விலையிலான உயர் தர, ஸ்கூட்டராக தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிறது.

சமதளம் அல்லாத கரடுமுரடான பகுதிகளில் கூட இந்த ஸ்கூட்டரில் பயணிப்பது மிக வசதியாக அமைகிறது, இதன்மூலம், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் நிறைவான, உற்சாகமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை உறுதி செய்கிறது. டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் டி.வி.எஸ் காப்புரிமை பெற்ற ‘ஈஸி’ ஸ்டாண்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது வாகனத்தின் மத்தியில் இருக்கும் ஸ்டாண்ட் (சென்டர் ஸ்டாண்ட் – பயன்படுத்துவதில் இருக்கும் சிரமத்தை 30% குறைக்கிறது.

டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ‘முதல் காதல்’ பதிப்பின் விலை ரூ.56,085 ஆகும். டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் விலை ரூ. 54,475 (எக்ஸ்–-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *