போஸ்டர் செய்தி

அடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வருகிறார்

டெல்லி, ஜன. 14–

அடுத்த மாதம் இறுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வருவதற்கு ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 7-ந்தேதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா வருவதாக ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, பிப்ரவரி மாத இறுதியில் டிரம்ப் இந்தியா வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.

அமெரிக்க தூதர் ஹர்ஸ் சிறிங்கலா சில தினங்களுக்கு முன்பு டிரம்ப்பை சந்தித்தார். அப்போது டிரம்ப் பயணத்துக்கான இந்திய தரப்பிலான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. டிரம்ப் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தலையொட்டி அவர் இந்தியா வர ஆர்வமுடன் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகமான இந்தியர்கள் இருப்பதால், அவர்களின் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *