செய்திகள்

சென்னை கோட்டூர்புரத்தில் கஞ்சாவுடன் சுற்றிய திரிபுரா வாலிபர்கள் 4 பேர் கைது

Spread the love

சென்னை, டிச. 2–

சென்னை கோட்டூர் புரத்தில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் கஞ்சா இருப்பதும், அவர்கள் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்து சென்னை நகரம் முழுவதும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷித் மியா (வயது 28), பிலால் உசேன் (30), அனோவர் உசேன் (21), இமான் உசேன் (30) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *