செய்திகள்

‘டிரினிட்டி கலைவிழா – 2019:’ ஸ்ரீவிஜயேந்திரர் துவக்கி அருளாசி வழங்குகிறார்

Spread the love

மயிலை ஆர்.ஆர். சபாவில் 7ந் தேதி மாலை 4 மணிக்கு

7வது ஆண்டாக ‘மக்கள் குரல்’, ‘டிரினிட்டி மிரர்’ ஏற்பாடு

* சி.வி. சந்திரசேகருக்கு பரத கலா ரத்னா விருது

* ஏ.கே. பழனிவேலுக்கு இசைப் பேரரசர் விருது

* பார்வதி ரவிகண்டசாலா, ராஜ்குமார் பாரதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

* பிரியா முரளிக்கு பரத கலா ரத்னா

* லாவண்யாவுக்கு நாட்டியக் கலா மணிஸ்ரீராம், டி.வி.அஷ்வினுக்கு இசைப் பேரரசர் விருது

சென்னை டிச. 3 –

டிரினிட்டி கலை விழா 2019 (டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா) இம்மாதம் 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி கலை அரங்கில் கோலாகலமாக துவங்குகிறது. காஞ்சி மடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இசை நாட்டிய விழாவை துவக்கி வைத்து அருளாசி வழங்குகிறார்.

‘மக்கள்குரல் டிரினிட்டி மிரர்’ ஆசிரியரும், டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்டிவலின் தலைவருமான ஆர். முத்துக்குமார், அமைப்பாளர் முரளி ராகவன் இருவரும் இணைந்து துவக்கிய இந்த இசை மற்றும் நாட்டிய விழா 7வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது.

மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும், வளரும் உள்நாட்டு இளம் கலைஞர்கள், வெளிநாட்டு இளம் கலைஞர்களுக்கு மேடை கொடுத்து அவர்களின் திறமையை மேம்படச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இசை நாட்டிய விழாவை ‘மக்கள்குரல் நிறுவனர் ஆசிரியர் எம்.சண்முகவேல் (எம்.எஸ்) நினைவாக கடந்த 2013ம் ஆண்டு ஆர்.முத்துக்குமார், முரளிராகவன் இணைந்து துவக்கியது நினைவிருக்கலாம்.

பிரபல கர்நாடக இசை மேதை மறைந்த மதுரை சோமுவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் பிரபல தவில் வித்வான் வலங்கைமான் சண்முகசுந்தரத்திற்கு இசை விழாவும், இன்று நம்மோடு இருக்கும் பிரபல நாட்டிய மேதை பேராசிரியர் சி.வி. சந்திரசேகருக்கும் நாட்டிய விழாவும் அர்ப்பணிக்கப்படுகிறது.

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த இசை விழாவின் முதல் நாளன்று இசை நாட்டியத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர் சி.வி. சந்திரசேகருக்கு பரத கலா ரத்னா விருதும், தவில் வித்வான் ஏகே பழனிவேலுக்கு இசைப் பேரரசர் மற்றும் ஏ.கே. சண்முகசுந்தரம் நினைவு விருதும், நாட்டியக் கலைஞர் பார்வதி ரவி கண்டசாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மகாகவி பாரதியாரின் பேரனும் பிரபல இசையமைப்பாளருமான ராஜ்குமார் பாரதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று நாட்டிய கலைஞர் பிரியா முரளிக்கு பரத கலா ரத்னா விருதும், லாவண்யா ஆனந்துக்கு நாச்சியார் கலாமணி விருதும் ஸ்ரீராமுக்கு இசை அரசர் மற்றும் மதுரை சோமசுந்தரம் நூற்றாண்டு விருதும், டி.பி. அஷ்வினுக்கு இசை அரசர் விருதும் வழங்கப்படுகிறது.

பரதநாட்டியம்

7ந் தேதி

மாலை 5.40 இரவு 7 சுதர்மா வைத்தியநாதன், 7.15 சங்கல்ப சமர்ப்பணம்: டாக்டர் ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது மாணவிகள்

8ந் தேதி

நண்பகல் 12 2.30 நவதீஷா டான்ஸ் பற்றிய கருத்தரங்கு, மாநாடு

பரதநாட்டியம்

பிற்பகல் 2.40 4 அகான்க்ஷா கிரீஷ்

4.10 5.30 கிறிஸ்டோபர் குருசாமி

5.40 7.00 முத்தையா பாகவதர் பாடல்களுக்கு பார்வதி ரவி கண்டசாலா மற்றும் மாணவிகள், 7.15 வாக்கேயம் பிரியா முரளி மாணவர்கள்.

9ந் தேதி 

நண்பகல் 12 2.30 நவதீஷா டான்ஸ் பற்றிய கருத்தரங்கு, மாநாடு

பரதநாட்டியம்

பிற்பகல் 2.40 4 ஜனனி கோமர், 4.10 5.30 ஜோஸ்னா வைத்தி, 5.40 7.00 லாவண்யா ஆனந்த், 7.15 ஜெயந்தி சுப்ரமணியம்

10ந் தேதி

பகல் 12 மணியிலிருந்து 2.30 நவதீஷா டான்ஸ் பற்றிய கருத்தரங்கு, மாநாடு

பிற்பகல் 2.40 4.00 பிரனதி ராமதுரை, 4.10 5.30 லுக்ரேஸ்யா மணீஸ்கோட்டி, 5.40 7.00 ஸ்ரீஷா சஷாங்.

கர்னாடக இசை:

இரவு 7.15 சங்கீத ரத்னா ஆர். சொர்ணாம்பாள் நினைவு இசை:

அக்கரை சகோதரிகள் பாட்டு, எல். ராமகிருஷ்ணன் வயலின், கே. சாய் கிரிதர் மிருதங்கம், டாக்டர் எஸ். கார்த்திக் கடம்.

11ந் தேதி

நண்பகல் 12.00 1.00 மஹன்யாஸ்ரீ பாட்டு, விஸ்வேஷ் சந்திரசேகர் வயலின், ஆத்தியா ஸ்ரீதர் மிருதங்கம், 1.10 2.10 அக்ஷரா வித்யாசங்கர் பாட்டு, விஸ்வேஷ் சந்திரசேகர் வயலின், ஆதித்யா ஸ்ரீதர் மிருதங்கம், 2.15 4.15 சுனில் ஆர். கர்க்யான் பாட்டு, விவிஎஸ் முராரி வயலின், சாய் கிரிதர் மிருதங்கம், பி.எஸ். புருஷோத்தம் கஞ்சிரா

4.30 6.30 சாந்தாலா சுப்ரமணியம் புல்லாங்குழல், விஷால் சாபுரம் சித்ரவீணை, அனிருதா பட் மிருதங்கம், கோவிந்த பிரசாத் மோர்சிங், 7.00 சித் ஸ்ரீராம் பாட்டு, எச்.என். பாஸ்கர் வயலின், பிரவீன் ஸ்ப்ராஷ் மிருதங்கம், என். குருபிரசாத் கடம்.

12ந் தேதி

12.00 2.00 அஞ்சனா திருமலை பாட்டு, ஷ்ரத்தா ரவீந்திரன் வயலின், பி.வி. ஸ்ரீவத்சா மிருதங்கம்,

2.15 4.15 திவ்யா ராமச்சந்திரன் பாட்டு, சுபஸ்ரீ சங்கர் வயலின், திருவையாறு சைலாஜ்குமார் மிருதங்கம்

4.30 6.45 எஸ். ஐஸ்வர்யா பாட்டு, டாக்டர் எம். நர்மதா வயலின், அக்ஷயா அனந்தபத்மநாபன் மிருதங்கம், கிரிதர பிரசாத் கஞ்சிரா

7.00 சந்தீப் நாராயண் பாட்டு, பி.வி. கணேஷ் பிரதசாத் வயலின், ஆர். சங்கரநாராயணன் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா

13ந் தேதி

12 2 ராஜேஸ்வரி சங்கர் பாட்டு, எம்.விஜய் வயலின், பி.குரு ராகவேந்திரா மிருதங்கம், 2.15 4.15 டி.பி. அஸ்வின் பாட்டு, விஸ்வேஷ் சந்திரசேகர் வயலின், பிரவீன் ஸ்பாரஷ் மிருதங்கம், 4.30 6.45 டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா நினைவு இசை: கடலூர் எஸ். ஜே. ஜனனி பாட்டு, விஜயகணேஷ் வயலின், கும்பகோணம் சுவாமிநாதன் மிருதங்கம், சி.எஸ். வெங்கட்ராமன் கஞ்சிரா,

7.00 குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, அக்கரை எஸ். சுப்பலஷ்மி வயலின், கே. சாய் கிரிதர் மிருதங்கம், திருச்சி முரளி கடம்.

14ந் தேதி

12 2 மெல்போர்ன் ரங்கன் சகோதரர்கள் பாட்டு, மெல்போர்ன் முரளி குமார் வயலின், வம்சிதாரா ஆனந்த் மிருதங்கம், 2.15 4.15 அனிருத் வெங்கடேஷ் பாட்டு, சிவ ராமமூர்த்தி வயலின், அக்ஷய் அனந்தபத்மநாபன் மிருதங்கம், 4.30 6.45 டாக்டர் எம். லலிதா மற்றும் எம். நந்தினி வயலின் ஜோடி, நந்தீஸ் சிவராஜா மிருதங்கம், நங்கநல்லூர் சுவாமிநாதன் கடம், 7.00 டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் குழுவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *