போஸ்டர் செய்தி

அண்ணா சிலைக்கு 15–ந் தேதி எடப்பாடி, ஓ.பி.எஸ். மாலை அணிவிக்கிறார்கள்

Spread the love

சென்னை, செப்.11–

அண்ணாவின் 111–வது பிறந்தநாளையொட்டி 15–ந் தேதி அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

பேரறிஞர் அண்ணாவின் 111–வது பிறந்த நாளான 15–ந் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவினுடைய திருஉருவச் சிலைக்கு, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தலைமை கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *