சிறுகதை

நம்பிக்கைத் துரோகி

வாடா ராஜேஷ்…. என்ன ஆளையே பார்க்க முடியலை… உள்ளே வா என்று வீட்டுக்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் ஜெயகுமார்.
ஜெயக்குமாரும் ராஜேஷூம் நெருங்கிய நண்பர்கள். பள்ளி காலம் முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்த குடும்ப நண்பர்கள். சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த அவர்கள் திருமணம் முடிந்து வேலை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் குடியேறினர்.
ஜெயக்குமார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக வீடு வாங்கி குடியேறினான். அவனை பார்ப்பதற்கு ராஜேஷ் வந்தான்.
ஏன்னடா…. நாங்க புதுசா வீடு வாங்கி பால் காய்ச்சிய அன்னைக்கு வந்தது தான்… 6 மாசத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் உனக்கு எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா… என்று தனது நண்பன் ராஜேஷை உரிமையுடன் கிண்டல் செய்தான் ஜெயக்குமார்.
வா உட்காரு… என்று கூறி தனது நண்பன் ராஜேஷை உட்கார வைத்த ஜெயக்குமார் அருகில் உட்கார்ந்த நபரை காண்பித்து…
டேய்… ராஜேஷ், இவர் எனது நண்பர் ராஜாராம். எங்கள் குடியிருப்போர் நலசங்க தலைவராக இருக்கார்.
நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி குடி வந்தவுடன் இவர் தான் எனக்கு பல்வேறு உதவிகள் செய்தார். ரொம்ப நல்லவர்.
உன்னை போலவே என்னுடைய குடும்ப நண்பராகவே ஆகிவிட்டார்.
எங்கள் வீடு மட்டுமல்ல, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அத்தனை பேரும் மதிக்கக்கூடிய நல்ல மனிதர் என்று ராஜாராமை அறிமுகம் செய்து வைத்தான் ஜெயக்குமார்.
உடனே ராஜேஷும் ராஜாராமும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அப்போது சமையல் அறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமாரின் மனைவி சாந்தி, வாங்க அண்ணே… வாங்க… நல்லா இருக்கீங்களா..
இப்ப தான் எங்க வீட்டுக்கு வழி தெரிந்ததா… உங்க மனைவி, குழந்தைகளை எல்லாம் கூட்டிட்டு வரலையா… என்று ராஜேஷிடம் நலம் விசாரித்தார்.
எங்க நேரமே இல்ல.. வேறு ஒரு வேலையா இந்த பக்கம் வரவேண்டி இருந்தது. அது தான் உங்களையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன் என்று ராஜேஷ் கூறினான்.
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கையில்,
ராஜாராம்… சரி ஜெயகுமார் நான் கிளம்புறேன் என்று கூறினார்.
சார் உக்காருங்க… சாப்பிட்டு போகலாம் என்று ஜெயக்குமாரும் அவரது மனைவி சாந்தியும் கூறினர்.
இல்ல பரவாயில்லை… அப்புறம் வருகிறேன் என்று ராஜ்குமார் கிளம்பி சென்றார்.
அவர் கிளம்பி சென்றதும் ராஜேஷ், டேய்… ஜெயக்குமார் இவரை பார்த்த கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு… கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ…
டே… போடா… அவர் ரொம்ப நல்லவர்… எனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார் தெரியுமா… இந்த வீட்டுக்கு நான் வந்த புதுசுல, இங்க பக்கத்தில் எல்லாமே புதுசா இருந்தது. அப்ப இவர் தான் எனக்கு உதவியா இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்தார் என்று ராஜ்குமாரை பாராட்டினான் ஜெயக்குமார்.
உடனே ஜெயக்குமாரின் மனைவி சாந்தியும் அண்ணே… அவரும் உங்களை போல் ரொம்ப நல்லவர் தான்… என்று கூறினார்.
சரி விடுங்க…. எனக்கு ஏதோ மனசுல தோன்றியதைக் கூறினேன் என்று ராஜேஷ் கூறினான்.
அதைத் தொடர்ந்து அனைவரும் சாப்பிட சென்றனர்.
அதன்பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ராஜேஷ் அங்கிருந்து கிளம்பி சென்றான்.
ஜெயக்குமாரும் – குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜ்குமாரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.
இதனால் ராஜ்குமார், ஜெயக்குமார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.
ஜெயக்குமார் வீட்டுக்கு மட்டுமல்ல, அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் நன்றாக பழகுவார். அனைவரின் வீட்டுக்கும் உரிமையுடன் செல்வார்.
ஜெயக்குமார் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் போது, ஜெயக்குமாரின் மகனை பள்ளிக்கு அழைத்து செல்வதும் அவனை மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பி அழைத்து வரும் வேலையை ராஜ்குமார் செய்வார்.
ஜெயக்குமாரின் மனைவியும் தனது குடும்ப நண்பர் என்பதால், ராஜ்குமாருடன் குடும்ப உறுப்பினர் போல் பழகினார்.
ராஜ்குமார் அந்த ஏரியாவில் பெரிய ஆளு. அந்த பகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால் இவர் முதல் ஆளா நின்று அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வந்து நிற்பார்.
அதனால் அந்த பகுதி மக்கள் அவரை தலைவர் போல் மரியாதை கொடுப்பார்கள்.
இப்படியே 6 மாதம் ஓடியது.
ஒரு நாள் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராஜ்குமார் வீட்டுக்கு வந்தான்.
அன்று ராஜ்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் விழா கோலாத்துடன் காணப்பட்டது.
அவனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன என்று தனது நண்பன் ஜெயக்குமாரிடம் கேட்டான்.
அந்த குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் விழா என்றும் கொஞ்ச நேரத்தில் விழா தொடங்கியதும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் .அதன் பின் உணவு சாப்பிடலாம் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் விழா நடக்கும் பகுதிக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிர்வாகிகள் சிறிது நேரம் பேசினர். அதன் பின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ஒருவர் யார் கண்ணிலும் படாமல் ஓரமாக தலையை குணிந்தபடி சென்றார்.
அவரை பார்த்ததும் ராஜேசுக்கு… இவரை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கே… என்று யோசித்து பார்த்தான்.
ஆனால் அவனுக்கு ஞாபகம் வரவில்லை.
உடனே தனது நண்பன் ஜெயக்குமாரிடம், அந்த நபரை காட்டி… இவரை எங்கேயோ… பார்த்துகிறேன். ஞாபகம் வரவில்லை… யார் இவர் , ஏன் இப்படி தலையை குனிந்தபடி வேகமாக நடக்கிறார் என்று கேட்டான்.
அட அவனை விடு… பொறுக்கி பையன்…. செத்த பாம்பு… என்று கூறினான்.
ராஜேசுக்கு ஒன்றும் புரியவில்லை…
அப்போது அவனுக்கு திடீரென ஞாபகம் வந்தது… இவர் ஜெயக்குமார் தன்னிடம் அறிமுகப்படுத்திய அடுக்குமாடி குடியிருப்பு தலைவர் ராஜ்குமார் போல் உள்ளதோ…. விழாவில் நிர்வாகிகள் பேசிய போது இவர் அங்கு இல்லையே… இவனை கேட்டால் அவன் ஒரு செத்த பாம்பு என்று சொல்கிறானே… ஒன்றும் புரியவில்லையே என்று யோசித்தான்.
கலை நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தது. அனைவரும் உணவு அருந்தினர்.
ஜெயக்குமார் தனது நண்பன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினருடன் உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றான்.
அங்கு சென்றதும் ராஜேஷ் தனது நண்பனிடன் டேய்… அப்ப ஒரு நாள் நடந்து போனாரே அவரு… உன் நண்பர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் தானே….
டே அவன் ஒரு ஆளு, அவனை பற்றி பேசாதே…. அதை விடு என்று பேச்சை மாற்றினான் ஜெயக்குமார்.
ஆனால் ராஜேஷ் விடவில்லை.
டேய்.. என்ன நடந்தது சொல்லு என்று விளக்கம் கேட்டான்.
ராஜேஷ் நீ அன்னைக்கு சொன்னது உண்மை தான். அந்த ராஜ்குமார் ரொம்பவே கெட்டவனா இருந்திருக்கிறான்.
ஆரம்பத்தில் எங்களிடம் நல்லவன் போல் நடந்து கொண்டான். அதனால் அவனை எங்கள் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் நம்பினோம்.
எங்கள் வீட்டுக்குள் குடும்ப உறுப்பினர் போல் அனுமதித்தோம்.
காலபோக்கில் அவனது நடவடிக்கை மோசமானது.
எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணிற்கு அவ்வப்போது சில அசிங்கமான தகவல்களை அனுப்பி உள்ளான்.
அவற்றை இவர்கள் ஏதோ தெரியாமல் அனுப்பி விட்டார் என்று விட்டுவிட்டனர்.
இந்த நேரத்தில் எங்கள் கீழ் வீட்டில் உள்ள நண்பர் வெளியூர் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், அந்த நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளான்.
உடனே அந்த பெண் கூச்சல் போட்டார்.
அவரது சத்தம் கேட்ட நாங்கள் அனைவரும் விரைந்து சென்று பார்த்த போது, அவன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட முயன்றது தெரியவந்தது.
உடனே நாங்கள் அவனை தர்ம அடி அடித்து உதைத்தோம்.
போலீசில் புகார் செய்யலாம் என்ற முடிவு எடுத்து போது, நண்பரின் மனைவிக்கு அவமானம் ஏற்படும் என்ற காரணத்தினால் போலீசுக்கு செல்லவில்லை.
அவனது குடும்பத்தினரின் முகத்திற்காக ஒரு மாதத்திற்குள் இந்த வீட்டை காலி செய்யும்படி அவனுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம்.
இப்போது எங்களின் முகத்தை பார்க்க முடியாமல் செத்த பிணத்தை போலவே நடமாடிக்கொண்டிருக்கிறான்.
நம்பி பழகியவரின் மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன் நம்பிக்கைத் துரோகி. உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான் என்பது உண்மையே என்று ஜெயக்குமார் கூறினான்.
அதைத் தொடர்ந்து ராஜேஷ் அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் கிளம்பி சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *