செய்திகள்

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி

விழுப்புரம், மார்ச் 2–

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பை கலெக்டர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2021 முன்னிட்டு தோ்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும், இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் செயல்முறை விளக்கம் வாயிலாக விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (பொது) மோகன், தோ்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *