செய்திகள்

17 ந்தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் சேவை தொடங்கப்படும்

சென்னை, மார்ச் 12–

மார்ச் 17 ந்தேதி முதல் முன் பதிவில்லா ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும் சீசன் டிக்கெட்டுகள் 15 ந்தேதி முதல் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சிறப்பு ரயில்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முன்பதிவு செய்த டிக்கெட்களை வாங்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டன.

இந்த சூழலில் முன்பதிவில்லா ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால், சதாரண பொதுமக்கள் பேருந்து பயணத்தையே நாட வேண்டி இருந்தது. இந்நிலையில், முன்பதிவில்லா ரெயில்களை படிப்படியாக இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன் ஒருபகுதியாக, மார்ச் 17ஆம் தேதி முதல் எந்தெந்த பகுதிகளுக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை எக்ஸ்பிரஸ் / மெயில் பயணக் கட்டணத்துடன் பின்வரும் வழித் தடங்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித்தடங்கள்

அதன்படி,

ரயில் எண் 06867 / 06868 விழுப்புரம் – மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது, 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் முன்பதிவில்லா டிக்கெட்கள் மூலம் பயணிக்கும் வகையில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல், ரயில் எண் 06087 / 06088 அரக்கோணம் – சேலம் – அரக்கோணம் ரெயிலானது 2 முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகளுடன் 6 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இயக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ரயில் எண் 06115 / 06116 சென்னை எழும்பூர்– புதுச்சேரி – சென்னை எழுப்பூர் சிறப்பு ரயிலானது 2 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகளுடன் 7 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் என, முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில்களுக்கான டிக்கெட்கள், அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரைவில் கிடைக்கும். அதேபோல், சீசன் டிக்கெட்கள் மார்ச் 15ஆம் தேதி முதல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *