செய்திகள்

நாளொன்றுக்கு 100 ‘எஸ்எம்எஸ்’ வரம்பு நீக்கம்: டிராய் அறிவிப்பு

Spread the love

சென்னை, பிப். 20–

தினமும் 100 ‘எஸ்எம்எஸ்’கள் என்கிற வரம்பை, இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நீக்கியுள்ளது.

இதுவரை, நாள் ஒன்றுக்கு செல்போன்களில் 100 எஸ்எம்எஸ்கள் என்கிற வரம்பு தீர்ந்த பின்னர் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் 50 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி, நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை எஸ்எம்எஸ்-களை வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம்.

கடந்த நவம்பர் 2012 ஆம் ஆண்டில் “தொல்லை தரும்” எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், டிராய் குறைந்தபட்சம் 50 பைசா என்கிற கட்டண வீதத்தை அறிவித்தது. தற்போது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத் தேர்வுகள்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உணரப்படுகிறது.

அதன்படி, தொலைத்தொடர்பு கட்டண (65 வது திருத்தம்) ஆணை, 2020, தொலைத்தொடர்பு கட்டண (54 வது திருத்தம்) ஆணை அறிமுகப்படுத்திய எஸ்எம்எஸ் கட்டணத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் திரும்பப் பெறப்படுகிறது” என்று டிராய் தொலைத் தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

இந்த வரைவு குறித்த பங்குதாரர்களின் கருத்துகளுக்கான காலக்கெடுவாக, மார்ச் 3 ஆம் தேதியும், எதிர் கருத்துகளுக்களான காலக்கெடுவாக மார்ச் 17 ஆம் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *