செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சம்: கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Spread the love

திருவனந்தபுரம்,பிப்.4–

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும் பலர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பீதி காரணமாக கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

வெளிநாட்டினர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாபயணிகளும் கேரளா செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக கேரள சுற்றுலாதலங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் ஓட்டல்களில் தங்க முன்பதிவு செய்தவர்களும் முன்பதிவை ரத்து செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக கேரள சுற்றுலாத்துறைக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

நிபா காய்ச்சல் பாதிப்பின் போதும், வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போதும் இதேபோல சுற்றுலாபயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத்துறை வருமானம் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *