செய்திகள்

தமிழகத்தில் 937 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை,ஜன.1–

தமிழகத்தில் நேற்று 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 68 ஆயிரத்து 415 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 573 ஆண்கள், 364 பெண்கள் என மொத்தம் 937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 259 பேரும், கோவையில் 89 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா 3 பேரும், அரியலூரில் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 13 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,122 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,038 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 8 ஆயிரத்து 501 பேர் உள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து கடந்த நவம்பர் 25-ந்தேதி முதல் கடந்த மாதம் (டிசம்பர்) 25-ந்தேதி வரை தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 1,936 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,853 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 59 பேரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. இதில் நேற்று மட்டும் புதிதாக 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 1,853 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 1,554 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *