செய்திகள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள்

Spread the love

சென்னை, பிப். 14–

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி, தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 474 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகிள் பிளே ஸ்டோரில்’ voter helpline App’ ஐ டவுன்லோடு செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *