செய்திகள்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று தருவதில் தமிழகம் 3–வது இடம்: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

Spread the love

சென்னை, டிச.3–

சென்னை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும், குற்ற வழக்குத்தொடர்வுத்துறை இயக்குனர் டி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி, இணை இயக்குனர் ஜி.சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் மாநில அளவிலான சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் கீழ் பணிபுரியும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வின் போது அமைச்சர், குற்ற வழக்குகளில் அதிகப்படியான தண்டனைகள் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கினார். மேலும், அமைச்சர், அகில இந்திய அளவில் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று தருவதில் தமிழகம் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணமான அரசு வழக்கறிஞர்களை பாராட்டியும், முதலிடம் பெறுவதற்காக சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இத்துறையில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர்களின் நலன்களுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு, அரசு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

முன்னதாக, காஞ்சிபுரம் துணை இயக்குநர் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் டி.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றி நினைவு பரிசு வழங்கினார். சங்க செயலாளர் வாஷிங்டன் தனசேகர் பொன்னாடை அணிவித்தும், சங்க பொருளாளர் பூங்கொத்து கொடுத்தும் அமைச்சரை வரவேற்றனர். இயக்குநர் டி.ஆர்.எஸ். ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *