செய்திகள்

‘‘வேளாண் துறை ஆராய்ச்சி மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும் நேரம் வந்து விட்டது’’:மோடி பேச்சு

புதுடெல்லி, மார்ச்.1–

‘‘விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’’ என்று மத்திய பட்ஜெட் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தரங்கு கூட்டத்தில் 2021-–22 பட்ஜெட்டில் விவசாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.

21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு அறுவடைக்கு பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி மற்றும் வேளாண் உற்பத்தி அதிகரித்து வருவதால் மதிப்பு கூட்டல் தேவை. இது 2-3 தசாப்தங்களுக்கு முன்னர் (20 அல்லது 30 ஆண்டுகள்) செய்யப்பட்டிருந்தால் நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

விவசாய கடன் இலக்கை மத்திய அரசு ரூ 12 லட்சம் கோடியிலிருந்து 16.50 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது – கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு நிதி ரூ .40,000 கோடியாக உயர்த்தப்பட்டது. மைக்ரோ பாசன நிதி இரட்டிப்பாகியது” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வேளாண் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் தொகை திட்டங்களை ரூ.11,000 கோடிக்குத் துவக்கியுள்ளோம். இது வேளாண் தொழில்களை மேம்படுத்த உதவும். உடனே சூடாக்கி சாப்பிட, உடனே சமைக்க கடல் உணவு உள்ளிட்ட பல உணவு வகைகளை மேம்படுத்தி வருகிறோம்’ என்றும் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *