வர்த்தகம்

மகளிர் ஆரோக்கியத்துக்கு வீடு தேடி வந்து மருத்துவ சேவை வழங்கும் டிக்கோட்ரா

சென்னை, மார்ச் 6

சென்னையைச் சேர்ந்த டிக்கோட்ரா ஹோம் ஹெல்த்கேர், பெண்களுக்கு மட்டுமேயான மருத்துவ சேவைகளை இல்லத்திற்கே சென்று அளிக்க துவங்கியுள்ளது. இம்மாதம் 8ந் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல புதிய மருத்துவ சேவைகளை இல்லங்களுக்கே சென்று வழங்குகிறது.

இந்நிறுவனத்தின் பெண்களுக்கான சிறப்பு சேவைகளில் கருத்தரிப்புக்கான ஆலோசனைகள், நவீன கருத்தடை முறைகள் மற்றும் இளம் பெண்களின் மாதவிடாய் கால உடல் நலம், வலி நிவாரணத்திற்கான ஆலோசனைகள், நடுத்தர வயது பெண்களுக்கும் மற்றும் மாத விலக்கிற்கான சிகிச்சைகள் ஆகியவை அடங்கும். டிக்கோட்ராவின் மனநல பிரிவு இளம்பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களிலிருந்து குணம்பெறவும் வயதான பெண்கள் எதிர்கொள்ளும் மனநல குறைபாடுகளிலிருந்து நலம் பெறவும் சிறந்த மருத்துவ சேவைகள் அளிக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.tikotra.com/women என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

டிக்கோட்ரா சென்னை செயல் அதிகாரி டாக்டர் பவுரவி ஷர்மா கூறுகையில், ‘‘முன்பெல்லாம் கிடைத்தது போல் நவீன கால பெண்களுக்கு பாரம்பரிய நிவாரணங்கள் பெறமுடிவதில்லை. விவரமின்மையும், தயக்கமும் அவர்களுக்கு தேவையான கவனிப்பையும். அறிவையும் மற்றும் ஆரோக்கியத்தையும் பெற முடியாமல் தடுத்துவிடுகிறது. டிக்கோட்ரா நிறுவனத்தின் மருத்துவ சேவை பணியாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதாலும் நிறுவனத்தின் உயர்பதவிகளில் பெண்கள் பணிபுரிவதாலும் நவீன பெண்மணிகளுக்கு தேவையான மருத்துவ சேவையை அளிப்பதற்காக மிக பொருத்தமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த மருத்துவ கவனிப்புச் சேவைகள் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை முழுவதும் வௌிநாடுகளில் வசிக்கும் அவர்கள் மகன்ஃமகள்களுக்கு சரியான நேரத்தில் விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

டிக்கோட்ரா சிறப்பான பயிற்சி பெற்ற சேவை தொகுப்புகளில் அனுபவம் வாய்ந்த பொது நல மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள், மன நல சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தகுதி பெற்ற மருத்துவ பராமரிப்பு அளிப்போர் உள்ளனர். 1800-313-1833 என்ற எண்ணில் அல்லது www.tikotra.com/women என்ற இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *