செய்திகள்

கச்சபேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா

Spread the love

காஞ்சீபுரம், ஜன.8-–

பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் 10ம் தேதி திருவாதிரை திருமுறை பெருவிழா நடைபெறுகிறது.

கோவில் வளாகத்தில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்கத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஓதுவார் மூர்த்திகளால் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. சைவ சமய சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாதிரை திருமுறை பெருவிழா குழுவினர் மற்றும் காஞ்சீ நகர செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *