செய்திகள்

நங்கநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன் நகைக் கொள்ளை

Spread the love

சென்னை , செப். 21 –

நங்கநல்லூர் எஸ்.பி.ஐ., காலனியில் குடியிருந்து வருபவர் தொழிலதிபர் ரமேஷ். ரமேஷ் சபரிமலைக்கு சென்றுள்ளார். அவர் மனைவி கோமல வள்ளி 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் அருங்காட்சியகத்திற்குப் சென்றார்.

அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.41 லட்சம் மதிப்புள்ள 120 பவுன் தங்கநகைகள்,ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *