செய்திகள்

சென்செக்ஸ் 1,268 புள்ளிகள், நிப்டி 364: சரிந்தது பங்கு சந்தை

மும்பை, பிப். 26–

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,268 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 364 புள்ளிகளும் ஒரே நாளில் சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் இன்று ஒரே நாளில் 1268 புள்ளிகள் வரையில் சரிந்து, சென்செக்ஸ் 49,770 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 364 புள்ளிகள் சரிந்து 14,732 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின், பங்குகள் சிறிதளவு உயர்ந்ததை தவிர, மற்ற பங்குகள் கடும் சரிவை சந்தித்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நிலவரம் என்ன?

மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸை பொறுத்த வரையில், அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமெண்ட் 12.19, சன் பார்மா 7.32, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 6.57, மாருதி சுசூகி 4.28, என்டிபிசி 1.04 புள்ளிகள் என உயர்ந்தன. அதேவேளை, ஐசிஐசிஐ பேங்க் 124.06, ரிலையன்ஸ் 97.99, கோடக் மஹிந்திரா 86.77 புள்ளிகள் வரையில் சரிந்தது.

தேசிய பங்குசந்தையில் அதிகபட்சமாக சன் பார்மா 2.03, அல்ட்ராடெக் சிமெண்ட் 1.98, ஸ்ரீ சிமெண்ட்ஸ் 1.60, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 1.35, மாருதி சுசூகி 1.16 புள்ளிகள் உயர்ந்தது. ஹெச்டிஎப்சி பேங்க் 53.24, ஐசிஐசிஐ பேங்க் 32.77, ரிலையன்ஸ் 24.88, பஜாஜ் பைனான்ஸ் 23.83 புள்ளிகள் சரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *