நாடும் நடப்பும்

எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி: ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்!

*ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது

எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னணி:

ஜெயலலிதா ஏற்படுத்திய புரட்சி பாரீர்!

எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையில் தொடரும் சாதனைகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடுகிறது. தமிழகமெங்கும் பலர் இல்லங்களில் வாசலில் அவரது புகைப்படத்திற்கு மாலை மரியாதை செய்து ஆராதித்தனர்.

அதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தமிழகத்திற்காக அவர் செய்த சேவைகளை். குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சியையே அவரது சுவாசமாய் இறுதி வரை வைத்ருந்தார். அவரது இதயத் துடிப்பெல்லாம் தமிழகத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துவதே என்று இரவு பகலாக பாடுபட்டார்.

அவரது கனவு மெய்ப்பட அவர் வழியில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அரும்பணியாற்றி வருவதால் தமிழகத்தின் பொருளாதார குறியீடுகள் நாடே வியந்து பாராட்டும் வகையில் இருக்கிறது.

பெரிய மாநிலமாக இருக்கும் தமிழகம் இன்று நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஆகும். அதன் ஜிடிபி ரூ. 18.50 டிரில்லியன் (அதாவது லட்சம் கோடிகள்) ஆகும். தனி நபர் ஜிடிபியில் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மனிதவள குறியீடும் தமிழகம் தேசிய அளவில் 10ம் இடத்திற்கு வந்து விட்டது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றைப் பரவ விடாமல் தடுக்க முழு ஊரடங்கை பிறப்பித்தபோது தினக்கூலி தொழிலாளர்களும் தங்க வீடு கூட இல்லாத பிழைக்க வந்த பல ஆயிரம் வட இந்தியர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கிய மாநிலம் தமிழகம் ஆகும்.

ஜெயலலிதா துவக்கிய அம்மா உணவகம் சுமார் 6 மாதங்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதை மறக்க முடியாது.

உற்பத்தித் துறையும் இதர பல துறைகளும் ஸ்தம்பித்து விட்டதால் நாடே பொருளாதார சரிவைக் கண்டது. ஆனால் தமிழகம் அந்தச் சரிவுகளைத் தாங்கிப்பிடித்து இன்று மீண்டும் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்துவிட்டது.

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது வங்கிகள் ஆபத்பாந்தவனாக கடன் வழங்கி உதவி புரிகின்றன.

வீடு, கல்வி, விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, சமூக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் வங்கிகள் வழங்கும் முன்னுரிமை துறை கடன்களுக்கான வராகடன் ரூபாய்.4,303 கோடியாக குறைந்துள்ளது.

இப்படி வராக்கடன் அளவு குறைந்து விட பல காரணங்கள் சுட்டிக்காட்டலாம். வங்கிகள் திரும்பச் செலுத்தும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ‘சிபில்’ மதிப்பெண்களை கொண்டு மட்டும் கடன் வழங்கி இருக்கக் கூடும்.

ஆனால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான மனித வளம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் எல்லாமே சிறப்பாக செயல்பட வைத்தவர் ஜெயலலிதா என்பதை நாடே அறியும்.

இன்று தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுவிட்டது.

மழைநீர் சேமிப்பு திட்டத்தாலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களாலும் உரிய நேரத்தில் தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டதாலும் தண்ணீர் பிரச்சினையும் தீர்ந்து விட்டது.

ஐடி துறை, உற்பத்தித் துறை, ரசாயன தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் தமிழகம் தேசியப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில்தான் இருக்கிறது.

சுற்றுலாத்துறை, சரக்கு போக்குவரத்து துறைகளும் சமீபமாக புதிய வேகத்துடன் இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பாதையில் பயணிக்க துவங்கி விட்டது.

மொத்தத்தில் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டம் – தமிழகத்தை சக்திவாய்ந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக உயர்த்திவிட்டது.

ஜெயலலிதாவின் சீரிய வளர்ச்சி சித்தாந்தங்களையும் திட்டங்களையும் தங்களது கொள்கைகளாக மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நல ஆட்சியை எடப்பாடியும் பன்னீர் செல்வமும் நடத்தும் நல்லாட்சிக்கு நல்ல உதாரணம் தமிழகத்தில் குறைந்து வரும் வராக்கடன் சதவிகிதம்.

இந்த பிரமாதமான ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து என்றும் தொடர வேண்டும் என்று தமிழகம் விரும்புவது ஏன் என்று புரிகிறதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *