சென்னை, ஜன. 20–
உலக நோய் தொற்று, பொருளாதார பெரும் வீழ்ச்சி, சமூக பதட்ட நிலை, சுற்றுச்சூழல் சீரழிவு, உலக அரசாங்கங்களின் தோல்வி… மனித இனம் எதிர்நோக்கி இருக்கும் பேராபத்தின் அடிப்படை காரணம் என்ன? என்று தத்துவ அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, இன்றைய உலகு சந்தித்து வரும் தனி நபர் மற்றும் சமூக நெருக்கடியின் முழுமுதல் காரணத்தை அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே வெட்ட வெளிச்சமாக்கி காட்டியதோடு அதிலிருந்து மீண்டெழும் வழியினையை பற்றியும் தெளிவுபட வைக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தி எழுப்பும் ஒரு வினா இது:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மனிதன், ஏன் பெரும் பூசல்களையும், துன்பங்களையும் அனுபவிக்கும் இந்நிலைக்கு வந்திருக்கிறான்?
மக்கள்தொகை பெருக்கம், நீதிநெறியின்மை, தொழில்-நுட்ப அறிவு மற்றும் நேரடி தொடர்பின்மை, எனும் எளிதான விளக்கங்களை விடுத்துப் பார்த்தால், இந்த துன்பத்திற்கான முழுமுதல் அடிப்படை காரணம் என்ன?
கொல்லாமை, பணிவு, அஹிம்சா போன்ற நல்லொழுக்கத்தை பாரம்பரியமாக பெற்றுள்ள இதுபோன்ற ஒரு நாட்டிற்கே ஏன் இப்படி நிகழ்ந்தது? எப்பொழுதிருலிருந்து முறை தவறிவிட்டது? என்று விளக்கும் “தி ரியல் கிரிசிஸ்” (உண்மையான பேராபத்து இதுவே) எனும் இவரது புத்தகம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒடியா, மராத்தி, குஜராதி, வங்காளம் என பத்து மொழிகளில், இலவசமாக பதிவிறக்கும் செய்யும் விதமாக www.kfionline.org எனும் இணையதளத்தில் கிடைக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா, சென்னையில் வசந்த விஹாரில் உள்ளது. அங்கு வாசக மையம், நூலகம், புத்தக மையம் மற்றும் அவர் போதனைகளின் பாதுகாப்பகம் உள்ளது.
கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா, அவரின் உரைகள், எழுத்து, கலந்துரையாடல் ஆகியவற்றிலிருந்து தொகுத்து சுமார் நூறு புத்தகங்களை பதிப்பித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக அதிக மக்களிடையே படிக்கப்படும் நூலாக உள்ளது. அவை www.kfionline.org மற்றும் அமேசானில் கிடைக்கும்.