செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விடுதியில் மாணவியின் கழுத்தை அறுத்த காதலன்

சிதம்பரம், மார்ச் 2–

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியர் விடுதி வளாகத்தில் மாணவியின் கழுத்தை அறுத்து காதலன், கத்தியால் தனது கையை கிழித்துக் கொண்டார். படுகாயம் அடைந்த இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே டி.பழூர் தாலுக்கா சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் புனிதா (18). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி தோட்டக்கலைத்துறை பட்டயப்படிப்பு முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பெரம்பலூர் பள்ளியில் படிக்கும் பொழுது அங்கு ஆசிரியராக இருந்த திருச்சி லால்குடி தாலுக்கா சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் சேவியர் வயது (30) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புனிதாவை பார்க்க சேவியர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது புனிதா தன்னுடன் படித்து வரும்வேறு ஒரு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை பார்த்த சேவியர் ஆத்திரமடைந்து சந்தேகந்த்துடன் மாணவி புனிதாவின் கழுத்து, இடது கை உள்ளிட்ட பகுதியில் கத்தி மற்றும் பிளேடால் அறுத்துள்ளார். பின்பு தானும் கை, கால்களை கத்தியால் கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *