செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி: திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை, அக். 2

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாக அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிர்வாக குழு இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆவின் வளாகத்தில் அதன் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவின் பொது மேலாளர் இளங்கோ, ஆவின் துணை தலைவர் பாரிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொது மேலாளர் நாச்சியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்பை விட தற்போது அதிக அளவில் பால் உற்பத்தியும் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டும் வருகிறது. மேலும், கிராமப்புற பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மாதம் வந்ம முதலமைச்சர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சென்றார்.

அதில் ஒரு பகுதியாக திருவண்ணா மலை மாவட்ட ஆவினுக்காக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் ஆவினில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அதிக இடங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆவின் கிளை மேலாளர் காளியப்பன், மங்கலம் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பரணி, நிர்வாக குழு இயக்குனர்கள், மற்றும் ஆவின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *