சினிமா செய்திகள்

ஸ்டார் மூவிஸில் ‘டெர்மினேட்டர்: டார்க் பேட்’ திரைப்படம் நாளை ஒளிபரப்பு

கோவை, அக். 17

பாக்ஸ் ஆபிசில் சிறந்த விமர்சனங்களைப்பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘டெர்மினேட்டர்: டார்க் பேட்’ இந்திய ரசிகர்களுக்காக ஸ்டார் மூவிஸ் தொலைக்காட்சியில் முதன் முறையாக அக்டோபர் 18-ந்தேதி நண்பகல் 12 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த படத்தை டிம் மில்லர் இயக்கி உள்ளார். இந்த படம் ஜேம்ஸ் கேமரூனின் 1991-ம் ஆண்டு எடுக்கப்பட்ட டெர்மினேட்டர்: ஜட்ஜ்மெண்ட் டே படத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. டெர்மினேட்டர் வரிசை படங்களில் இது 6 வது படமாகும்.ஏறக்குறைய 23 ஆண்டுகளுக்கு பிறகு, அசல் இரட்டையர்களான லிண்டா ஹாமில்டன் மற்றும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோர் சாராகோனராகவும் ,டி-800 டெர்மினேட்டராகவும் இந்த அறிவியல் புனைக்கதைக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாமில்டன் மற்றும் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோர் தங்கள் சிறந்த நடிப்பால் ரசிகர்களைகவர்ந்து வருகின்றனர்.

இந்த 2 புகழ்பெற்ற நடிகர்களும் புதிய நடிகர்களான மெக்கன்சிடேவிஸ், நடாலியாரெய்ஸ், கேப்ரியல்லூனா மற்றும் டியாகோபொனெட்டா ஆகியோருடன் இணைந்துள்ளனர். ஜேம்ஸ்கேமரூனின் கதையுடன் பிளாக் பஸ்டர் தயாரிப்பான இந்த திரைப்படம் ஒரு புதிய சகாப்தத்திற்கு அடியெடுத்துவைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *