வாழ்வியல்

காபி தூளை மிச்சம் செய்ய அமெரிக்க தொழில்நுட்பம்!

Spread the love

காபிதூளை வீணடிப்பதை சரி செய்யும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள ஆரிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், குறைந்த செலவில் காபி கடைகளில், காபி போட என்ன செய்யலாம் என, ஆராய்ந்துள்ளனர்.

இதற்கென கணித வல்லுனர், பொருள் அறிவியலாளர் மற்றும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த காபி வல்லுனர்களுடன் கூட்டாக ஆராய்ச்சி செய்து, கச்சிதமாக காபி போடும் முறையை உருவாக்கியுள்ளனர்.

இதன்படி, எஸ்பிரசோ வகை காபி போடுவதற்கு வழக்கமான, 20 கிராம் காபிதூளுக்கு பதிலாக, 15 கிராம் துாள் பயன்படுத்தினாலே அதே மணம், சுவை, திடம் கொண்ட டிகாக்சன் கிடைத்துவிடும் என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல காபி துாளை நைசாக அரைக்காமல், மொறுமொறுப்பாக அரைத்துப் பயன்படுத்தினால் நல்ல மணம் கிடைப்பதோடு, எஸ்பிரசோ இயந்திரத்தில் கொதிக்கும் நீரை, 25 வினாடிகளுக்கு பதிலாக, 14 நொடிகளுக்குள் டிகாக்சனை எடுத்துவிடலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிறிய மாற்றங்களை செய்தால், அமெரிக்காவில் மட்டும், காபி கடைகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மிச்சம் பிடிக்கலாம் என, ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *