செய்திகள்

‘ஒண்டர்லா ஹாலிடேஸ்’ பொழுதுபோக்கு பூங்காவிற்கு 2024–ம் ஆண்டு வரை வரிவிலக்கு

Spread the love

சென்னை, நவ.8-

தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய பொழுதுபோக்கு பூங்காவுக்கு வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங்கின் உத்தரவு வருமாறு:-

தமிழகத்தில் புதிதாக ‘ஒண்டர்லா ஹாலிடேஸ்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா தொடங்கப்பட உள்ளது. இந்த பூங்காவுக்கு இம்மாதம் 1-ந்தேதியில் இருந்து 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரைக்கும் பொழுதுபோக்கு வரியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது.

இது தமிழகத்துக்கு வரும் புதிய முதலீடு என்பதால், இந்த வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *