வர்த்தகம்

31 டன் எடையை சுமைக்கும் திறன்; 10 டயர் : டீசல் சிக்கன டாடா ‘சிக்னா டிரக்’ அறிமுகம்

சென்னை, மார்ச். 6

வர்த்தக வாகனத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பா ளரான டாடா மோட்டார்ஸ், 31 டன்கள் மொத்த வாகன எடையுடன் இந்தியாவின் முதல் 10 சக்கரங்களுடன் கூடிய உறுதியான டாடா சிக்னா லாரியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பொறியியல் திறன் மற்றும் தொழில்நுட்ப மேன்மை கொண்டது. இதன் விலை ரூ.12 லட்சம் முதல் உள்ளது.

டாடா சிக்னா டிரக் 31 டன் சரக்கு சுமையுடன் சிக்கன எரிபொருள், குறைந்த டயர் மற்றும் பராமரிப்பு செலவினைக் கொண்டிருக்கும். ஒரு ஆண்டுக்கும் குறைவான இயக்க காலஅளவிற்குள் இதற்கான முதலீட்டுத் தொகையை திரும்ப பெற இயலும் மற்றும் பின்வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கும் வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

டாடா சிக்னா டிரக் சரக்கு இல்லாமல் செல்லும் போது இதில் உள்ள லிப்ட் ஆக்சில் செயல்பட்டு குறைந்த டீசல் உபயோக திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளும். லிப்ட் ஆக்சில் உயர்ந்திருக்கும் நிலையில் இதை இயக்குவது டேங்கர் வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆதாயமளிப்பதாக இருக்கும். காலியான டேங்கருடன் திரும்பி வருகையில் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். பெட்ரோலியம் ஆயில் மற்றும் கெமிக்கல்கள், தார், சமையல் எண்ணெய், பால் மற்றும் நீர் போன்ற அனைத்து வகை டேங்கர் பயன்பாடுகளுக்கும் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள், லூப்ரிகன்ட்கள் மற்றும் வேளாண் தயாரிப்புகள் போன்ற தொழிலக பொருட்களுக்கும் இது மிகவும் பொருத்தமான வாகனமாக இருக்கும். பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பால் சிக்னா 3118.T லாரி சான்றாக்கம் பெற்றிருக்கிறது.

சம்பூர்ண சேவா 2.0 என்பதன்கீழ் மதிப்பு கூட்டப்பட்ட சேவை மற்றும் சர்வீஸ் வாக்குறுதி உத்தரவாதம் மற்றும் 6 ஆண்டுகள்/6- லட்சம் கிலோமீட்டர்கள் என்ற நிலையான வாரண்டியுடன் சிக்னா 3118.T விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *