வர்த்தகம்

கூடுதல் வசதி, பாதுகாப்பு, எடுப்பான தோற்றத்துடன் டாடா சபாரி அட்வெஞ்சர் சொகுசு கார் அறிமுகம்

சென்னை, பிப். 25

டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தப்பட்ட சொகுசு அட்வெஞ்சர் பெர்சனா காரை அறிமுகம் செய்துள்ளது. 7 பேர் உட்கார்ந்து செல்லலாம். இதன் விலை ரூ.14.69 லட்சம் முதல் உள்ளது. கவர்ச்சி கம்பீர தோற்றம், சொகுசு வசதிகள், எடுப்பான உள் அலங்காரம், பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் அனைவரையும் கவரும் என்று இதன் தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.-

இதன் அறிமுக விழாவில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி குன்டர் எட்ஸ்செக் ஆகியோர் பங்கேற்றனர்.

டாடா மோட்டார்ஸ் வர்த்தக பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா பேசுகையில், “புதிய சபாரி பன்முக வாழ்க்கை முறைகளுடன் ஒத்திசைந்துள்ளது. அதன் சொகுசான உட்புறங்கள், அதிநவீன வசதி மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் கொண்டுள்ளது.

‘’அட்வென்சர்’ பெர்சனா, அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாடிக்கையாளர்கள் அதிக விருப்பத் தேர்வுகளுடன் தேர்ந்தெடுப்பர்” என்றார்.

சபாரி அதிக பன்முகத் தன்மை, மிகுந்த சொகுசு மற்றும் உறுதியை அளிக்கிறது, இது அதிவேக நெடுஞ்சாலை அல்லது கிராம சாலைகள் அனைத்திலும் சீறிப் பாய்ந்து செல்கிறது. எடுப்பான டர்போ சார்ஜ் செய்யப்பட்ட கைரோடெக் எஞ்சின் மற்றும் அதன் 2741 வீல் பேஸுடன் எடுப்பான ஆஷ்வுட் பூச்சுடாஷ் போர்டுடன் இணைந்து, பிரத்தியேகமான உள் அலங்காரத்துடன் 6 மற்றும் 7 பேர் விருப்பங்களுடன் உள்ளது என்றார் அவர்.

இது பற்றி அறிய https://cars.tatamotors.com வலைதளத்தைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *