சென்னை, ஜன. 22–
மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, எஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ், ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களான சோழமண்டலம் , எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ், சுந்தரம் பைனான்ஸ் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகளான யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுடன், அதன் வாகன வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும் வகையில் நிதி சலுகைகளுடன் கடன் வழங்கும் முயற்சியில் கூட்டாண்மைகளை மேற்கொண்டுள்ளது. இந்த செயல் திட்ட இணைப்புகள் வாடிக்கையாளர் வாழ்க்கை முழுவதும் புதிய மற்றும் சொந்தமான வாகனங்களின் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பு சலுகைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கூடுதலாக, இந்த இணைப்புகளின் வழியாகக் கிடைக்கும் சலுகைகளில் எரிபொருள் நிதியளிப்பு, பணி மூலதன நிதி, மொத்த நிதி மற்றும் சர்வீஸ் செலவு நிதி போன்ற துணை நிதிகளும் அடங்கியுள்ளது, வாடிக்கையாளர்கள் அனைத்து கூட்டாளர் நிதியாளர்களிடமிருந்தும் குறைந்த நடைமுறைகளுடன், கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களைப் பெற உதவும்.
டாடா மோட்டார்ஸ் அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது, அதாவது, கிராமப்புற வாடிக்கையாளருக்கு வாகன கடன் கிடைக்கச் செய்கிறது. புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கிறது. வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் மூலதனத் தேவைக்கு கடன் வழங்க வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் அட்டைகளும் வழங்கப்படும். – இது வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் செலவுகளை செயல்திறனுடன் பூர்த்தி செய்ய உதவும்.