சினிமா

‘‘தமிழகத்து அமிதாப்பச்சன்… சத்யராஜ்! – டைரக்டர் பி.வாசு

Spread the love

‘என்னைப் பொறுத்தவரை தமிழகத்து அமிதாப்பச்சன் சத்யராஜ் தான்…’ என்று பிரபல டைரக்டர் பி.வாசு பெருமிதத்தோடு கூறினார்.

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குனர் யு.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி வால்டர் தேவாரம் பேசுகையில்,

‘எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாது. நான் சென்னை வந்த பிறகு எம் ஜி ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின் போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாத போது என் தலைமையில் சென்னையில் கூட்டம் நடத்தினோம். எம்.ஜி.ஆர். கூப்பிட்டு பாராட்டினார். இது மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கிறது’ என்றார்.

‘சிவாஜியை நேரில் பார்த்திருக்கிறேன். சத்யராஜை எனக்கு நெருக்கமாக தெரியும். சிபியை சின்ன வயதில் பார்த்துள்ளேன். இயக்குநர் வாசு வால்டர் வெற்றிவேல் படம் எடுத்த போது என்னை வந்து சந்தித்தார். இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள் நன்றி’ என்று கூறினார்.

ரஜினி க்ளாப் பிரபு கேமரா ஆன்

இயக்குநர் பி. வாசு பேசுகையில், ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு கேமரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொறுத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான்’ என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்ன போது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார். இது போலீஸ் குடும்பம் எடுத்த படம் நன்றாகதான் இருக்கும். இது கண்டிப்பாக வெற்றி படமாகவே இருக்கும் என்றார்.

நடிகர் பாவா, நடிகை ரித்விகா, ஷனம் ஷெட்டி, இயக்குநர் அருண்குமார், இயக்குநர் அறிவழகன் பேசினார்கள். இயக்குநர் ஷாம் ஆண்டம் பேசுகையில்,

சிபிராஜ் பள்ளியில் எனக்கு சீனியர். அப்போது குண்டாக இருப்பார்.இப்போது செம ஃபிட்டாக மாறி மாஸாக இருக்கிறார். வெற்றிக்காக அவர் எவ்வளவு பாடுபடுகிறார் என்பது தெரியும். “வால்டர் வெற்றிவேல்” எல்லோருக்கும் பிடித்த படம். “வால்டர்” படமும் கண்டிப்பாக ஜெயிக்கும். இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார் என்றார்.

நடிகர் நட்டி சுப்பிரமணியம் பேசுகையில், சேவையா செய்ய வேண்டியது வியாபாரமா மாறினா என்ன ஆகும்னு சொல்ற படம் தான் வால்டர் என்றார்.

நடிகர் சார்லி பேசுகையில், சினிமாவில் அப்பா இருந்தால் மகன் வரும்போது அவருடன் ஒப்பீடு வந்துகொண்டே இருக்கும். சிபிராஜ் அதிலிருந்து விலகி பெரும் கலைஞனாக வந்திருக்கிறார் என்றார்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ், நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா, இயக்குநர் மிஷ்கின், நடிகர் சிபிராஜ், இயக்குநர் யு.அன்பு, தயாரிப்பாளர்கள் ஸ்ருதி திலக், பிரபு திலக் ஆகியோரும் பேசினார்கள்.

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ் ஷ்ரின் கான்ஞ்வாலா நாயகியாக நடிக்க, சதுரங்கவேட்டை நாயகன் நட்டி மற்றும் சமுத்திரகனி, முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ராசாமதி, படத்தொகுப்பு – எஸ். இளையராஜா, பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி

கலை இயக்கம் – ஏ.ஆர். மோகன், நடனம் – தஸ்தா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *