செய்திகள்

தலைசிறந்த 20 பெண்கள் விருது: தமிழிசை தேர்வு

ஐதராபாத், மார்ச் 9–

உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளில் ஒருவர் என்ற விருது தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சர்வேதச பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில், 9 வது முறையாக சர்வதேச அளவிலான தலைசிறந்த 20 பெண்கள் என்ற விருது வழங்கப்பட்டது. இதில் உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகள் என்ற பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழிசை தெரிவித்ததாவது:–

பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சமத்துவம் போன்றவற்றுக்கு குரல் எழுப்புபவர் என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *