டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் மீண்டும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
டெங்கு காய்ச்சல் வந்து குணமடைந்தவர் தொடர்ந்து 3 முதல் 5 நாள்கள் வரை ஓய்வில் இருக்கவேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். மீண்டும் டெங்கு தொற்றுள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை?
காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளவேண்டும். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளுக்குச் சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நன்றி : விகடன்