செய்திகள்

4 புதிய அரசு கலை – அறிவியல் கல்லூரிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 20– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-–26–ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் […]

Loading

செய்திகள்

ஈரானைத் தாக்கக் கூடாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ, ஜூன் 20– ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை […]

Loading

செய்திகள்

‘மா’ விவசாயிகளின் கோரிக்கை: தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 20– மா விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காணாத தி.மு.க. கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அண்ணா தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சைதுண்டு அணிந்து கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட ‘மா’ விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி, ஜூன் 20– ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாளை வாழ்த்துக்களை பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும், தலைமைத்துவமும் நாடு […]

Loading

செய்திகள்

மதுரை முருகன் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள்: ஓட்டுனர் உரிமம், காப்பீடு, ஆதார் வழங்க வேண்டும்

மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, ஜூன் 20– மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டு மாநாட்டில் பங்கேற்கலாம் என்றும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் நாளை மறுநாள் (ஜூன் 22) ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் வாகன பாஸ் வாங்கி வர வேண்டும் […]

Loading

செய்திகள்

ஹைப்பர்சோசானிக் ஏவுகணை மூலம் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

தெக்ரான், ஜூன் 20– இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது, ஒலியை விட 5 மடங்கு வேகம் கொண்ட ஹைபர்சானிக் ஏவுகணைகளை ஏவி, இஸ்ரேலுக்கு ஈரான் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் 8 ஆவது நாளை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 450 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரம் டிரோன்களை ஈரான் ஏவிய நிலையில், அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் இடைமறித்து […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைவு

சென்னை, ஜூன் 20– தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களை நகை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. உலக பொருளாதாரச் சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. […]

Loading

செய்திகள்

யுத்த பகுதியில் பெண் போராளிகள் துணிகரம் பாரீர்

தலையங்கம் காசாவை நோக்கிய மனிதாபிமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த ‘மட்லீன்’ கப்பலை இஸ்ரேலிய இராணுவம் சர்வதேச கடல் பகுதியில்கைப்பற்றி, உலகப் புகழ் காலநிலை போராளி கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 பேரை நாடுகடத்திய சம்பவம், உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, இஸ்ரேலின் காசா முற்றுகை குறித்த கடுமையான கேள்விகளை மீண்டும் ஒருமுறை வலுவாக எழுப்பியுள்ளது. ஏனெனில் சர்வதேச கடல் பரப்பில் ஒரு படகை இடைமறிக்கவோ அல்லது காசாவில் பட்டினி கிடக்கும் பொதுமக்களுக்கு உதவி மறுக்கவோ […]

Loading

செய்திகள்

தென்பெண்ணை ஆற்றங்கரையில் பல்லவர் கால மூத்த தேவி சிற்பம்

விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் அருகே அமைந்துள்ளது அத்தியூர் திருவாதி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வீ.குபேரன் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டறியப்பட்டது. இதுபற்றி ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: அத்தியூர் திருவாதி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடக்குக் கரையில் சிறிய கோயில் அமைத்து அம்மன் என வழிபட்டு வருகின்றனர். […]

Loading

கதைகள் சிறுகதை

அமானுஷ்யம் (பாகம் 5) – ஆர். வசந்தா

நாமும் பல அமானுஷ்ய நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டோம். இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். கோனேரிராஜபுரம் நடராஜரைப் பற்றிய சில அமானுஷ்யங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த ஊரை ஆண்ட வரகுணபாண்டியன் தன் அரசவை சிற்பியை கூப்பிட்டு தனக்கு ஒரு உதவி தேவைப்படுவதாகக் கூறினார். நம் ஊரில் ஒரு பெரிய நடராஜர் சிலை செய்து கோவிலில் வைத்து வணங்க வேண்டும் என்றார் அவர். அதற்கேற்றார் போல் நீங்கள் தான் சிலை செய்ய வேண்டும் என்றும் […]

Loading