செய்திகள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

சென்னை, மார்ச் 5– சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2வது […]

செய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்பு தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கம் சென்னை, பிப்.27– கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் எம்ஜிஆரின் […]

செய்திகள்

ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம்

சென்னை, கோவை, திருநெல்வேலியில் ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்தார் ரூ.109½ கோடியில் மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 98 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி, திருப்பூர் மாவட்டம் […]

செய்திகள்

அம்மாவின் அரசை குறை கூறுவது தான் ஸ்டாலினின் வாடிக்கை

தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தீர்கள்? சொல்ல முடியுமா? அம்மாவின் அரசை குறை கூறுவது தான் ஸ்டாலினின் வாடிக்கை எடப்பாடி பழனிசாமி தாக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் துடிப்பான பணிகளுக்கு பாராட்டு புதுக்கோட்டை, பிப்.22– அம்மாவின் அரசை குறை கூறுவது தான் ஸ்டாலினின் வாடிக்கை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் […]

செய்திகள்

3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.368 கோடி செலவில் 6 தளத்துடன் டவர் பிளாக் கட்டிடம்

3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.368 கோடி செலவில் 6 தளத்துடன் டவர் பிளாக் கட்டிடம்: எடப்பாடி அடிக்கல் தூத்துக்குடி, பரமக்குடியில் ரூ.11 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு: முதல்வர் திறந்தார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 121 கோடியே 80 […]

செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா அரங்கேற்றம்; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

* சரியான பாசறையில் பாடம் பயின்று கைதேர்ந்திருக்கிறார் * கலை, கல்வியில் சிறந்து பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா அரங்கேற்றம்; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து குரு ஊர்மிளா சத்யநாராயணனுக்கும் பாராட்டு சென்னை, பிப்.7 மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின் (பிரபல நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணாவின் சிஷ்யை ரிதன்யா பிரியதர்ஷிணி) பரதநாட்டிய அரங்கேற்ற விழா நேற்று (6 ந் தேதி) சென்னை சேத்துபட்டு, லேடிஆண்டாள் கலையரங்கத்தில் […]

செய்திகள்

வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

* ரூ.600 கோடி செலவில் 5 லட்சம் சதுரடியில் 14 தளங்கள் * 500 படுக்கை வசதிகளுடன் சர்வதேச தரத்தில் சிகிச்சை வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை, பிப்.6- வேலூரில் சர்வதேச தரத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நறுவீ ’ மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். வேலூரில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி ‘நறுவீ’ மருத்துவமனை ரூ.600 கோடி […]

செய்திகள்

ரூ.24½ கோடியில் மண்டல புற்றுநோய் மையம்: முதல்வர் எடப்பாடி திறந்தார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24½ கோடியில் மண்டல புற்றுநோய் மையம்: முதல்வர் எடப்பாடி திறந்தார் திருநெல்வேலி, கோவை, தஞ்சையில் ரூ.32 கோடி செலவில் மருத்துவக் கட்டிடங்களைத் துவக்கினார் சென்னை, பிப்.5– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (4–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையத்தை காணொலிக் […]

செய்திகள்

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணம்

சென்னை, பிப். 5– கடலூர் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் அம்மாவின் கனவாகும். இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். […]

செய்திகள்

தமிழகத்துக்கு இதுவரை 12 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது

8 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது தமிழகத்துக்கு இதுவரை 12 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் சென்னை, பிப்.4- 8 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் சென்று […]