செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த நாஞ்சில் சம்பத்

சென்னை, டிச.6- த.வெ.க. தலைவர் விஜய்யை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து தன்னை த.வெ.க.வில் முறைப்படி இணைத்துக்கொண்டார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:- தமிழக அரசியலில் அதிக அளவு இளைஞர்களை விஜய் ஈர்த்து வைத்து இருக்கிறார். விஜய் என்னிடம் நான் உங்கள் ரசிகன் என்றார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க. ஆதரவாளராக இருந்த என்னை தி.மு.க.வினர் அநாகரீகமாக நடத்தினர். தி.மு.க.வில் நான் சைக்கிள் கூட கேட்டதில்லை, கேட்டாலும் கிடைக்காது, அது வேறு. விஜய்க்கு ஆதரவாக நான் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் சென்னை, ஜூலை 12– தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் . தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading

செய்திகள் வாழ்வியல்

கல்லீரல், சிறு நீரகங்களின் செயல்பாடுகளை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும் மாதுளை தோல் பொடி

நல்வாழ்வுச் சிந்தனைகள் மாதுளையின் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதன் தோலில்கூட அளப்பரிய நன்மைகள் புதைந்துள்ளன ஆச்சரியமாக இருந்தாலும் உண்மைதான்! மாதுளை தோலில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. மாதுளை தோலில் புரதம், பீனாலிக் கலவைகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே மாதுளை தோலை நன்கு வெயிலில் உலர்த்தி, மிக நைஸான பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் சிரமம் இருந்தால், கடைகளிலேயே […]

Loading

செய்திகள்

“அலைகள்” திட்டம் மூலம் மீனவக் குடும்பங்களுக்கு ரூ.22.5 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்

சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், அதன் செயலாளர் தலைமையில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10–-ம் நாள் தேசிய மீன்வளர்ப்போர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆணையர் இரா. கஜலட்சுமி துவக்கவுரை வழங்கி, மீன் உற்பத்தி அதிகரித்திட அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மீன்வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரசு செயலாளர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

வடகொரியாவுடன் செயல்பாடுகளிலும் உறுதியான உறவு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

மாஸ்கோ, ஜூலை 11– ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வடகொரியாவுக்கு 2 நாள் பயணமாகச் செல்கிறார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வடகொரியாவுக்குப் புறப்படும் முன், மலேசியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, கடந்த ஜூன் 17 ந்தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தார். வடகொரியாவுடன் உறவு உறுதி அப்போது, ரஷ்யா-வடகொரியா […]

Loading

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
செய்திகள்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 11– தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் வழியில் பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் […]

Loading

செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், ஜூலை 11– 75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் […]

Loading

செய்திகள்

ஏ.ஐ. மூலம் பாக்டீரியாக்களை அழிக்கும் புரதம்: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை

மெல்போர்ன், ஜூலை 10– செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களான ஈ.கோலியை அழிக்கும் ஒரு செயற்கைப் புரதத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மெல்போர்னைச் சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏ.ஐ.யைப் பயன்படுத்தி ஒரு பயன்படுத்தக்கூடிய உயிரியல் புரதத்தை ஆஸ்திரேலியக் குழு உருவாக்கியது இதுவே முதல் முறை. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து, விரைவான, […]

Loading

செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

சென்னை, ஜூலை 10– அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் […]

Loading