செய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்பு தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கம் சென்னை, பிப்.27– கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் எம்ஜிஆரின் […]

செய்திகள்

ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம்

சென்னை, கோவை, திருநெல்வேலியில் ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்தார் ரூ.109½ கோடியில் மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல் சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 98 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி, திருப்பூர் மாவட்டம் […]

செய்திகள்

மும்பையிலிருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னை, பிப்.23- தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் […]

செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப்.16- ‘முன்கள பணியாளர்களை போல தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’, என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று முன்தினம் 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் […]

செய்திகள்

3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.368 கோடி செலவில் 6 தளத்துடன் டவர் பிளாக் கட்டிடம்

3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.368 கோடி செலவில் 6 தளத்துடன் டவர் பிளாக் கட்டிடம்: எடப்பாடி அடிக்கல் தூத்துக்குடி, பரமக்குடியில் ரூ.11 கோடியில் அவசர சிகிச்சைப் பிரிவு: முதல்வர் திறந்தார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 135 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 121 கோடியே 80 […]

செய்திகள்

மருத்துவமனையிலிருந்து அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்

சென்னை, பிப்.4– கொரோனா தொற்றால் தீவிர நுரையீரல் பாதிப்புக்குள்ளான உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5ந்தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தததையடுது்து வீடு திரும்பினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். […]

செய்திகள்

போலியோ சொட்டு மருந்து முகாம்: எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது சென்னை, ஜன. 31 தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 70.26 […]

செய்திகள்

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் பரிசு

சென்னை, ஜன.30- கொரோனா தடுப்பு பணி குறித்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி வாழ்த்து பெற்றார். உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவைகளின் கூட்டமைப்பு, மற்றும் தேசிய தொழில்சார் சுகாதார அறிவியல் நிறுவனமும் இணைந்து, உலகளாவிய மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றில் பணிகள் மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு […]

வர்த்தகம்

கொரோனா தடுப்பூசி கொண்டு செல்ல ரூ.3.12 கோடியில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள்: இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலியம் நன்கொடை

சென்னை, ஜன. 28 இந்தியன் ஆயில் தமிழ்நாடு மாநில அலுவலகமும், சென்னை பெட்ரோலிய நிறுவனமும் ஒருங்கிணைந்து, சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் கோவிட் தடுப்பூசி பாதுகாப்பாக கொண்டு செல்ல குளிர் பதனப் பெட்டிகள், குளிரூட்டப்பட்ட வேன்கள் வாங்க தமிழக மருத்துவத்துறைக்கு நன்கொடையாக ரூ.3.12 கோடி வழங்கின. தமிழ்நாடெங்கும் கோவிட் தடுப்பூசி மருந்துகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்து வசதிக்காக ஐஸ்லைண்டு ரெப்ரிஜிரேட்டர்கள், டீப் ப்ரீசர்கள், வாக்-இன் கூலர்கள் மற்றும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட டிரக்குகளை கொள்முதல் செய்வதற்கு […]

வர்த்தகம்

ரேலா மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கினார்

2 மாதங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியை பரிசோதனை முறையில் போட்டுக்கொண்ட டாக்டர் முகமது ரேலா சென்னை, ஜன. 22– சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான ரெலா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் முகாமை தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ரேலா மருத்துவமனை தலைவரும் டாக்டருமான பேராசிரியர் ரேலா முன்னிலையில் துவக்கி வைத்தார். முகமது ரெலா பேசுகையில், தடுப்பூசி மட்டுமே தொற்று பரவலை […]