செய்திகள்

ஹைட்ரஜனில் வாகனங்களை இயக்க தயார் நிலையில் இந்தியா: மோடி

புதுடெல்லி, மார்ச். 3– மத்திய அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அடுத்தபடியாக கல்வி, திறன், ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு 2-வது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். கல்வித்துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வெபினாரில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-– ‘‘2021 பட்ஜெட்டில் கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் இரண்டாவது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஆத்மனிர்பர் பாரத்” […]

செய்திகள்

‘‘வேளாண் துறை ஆராய்ச்சி மேம்பாட்டில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும் நேரம் வந்து விட்டது’’:மோடி பேச்சு

புதுடெல்லி, மார்ச்.1– ‘‘விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’’ என்று மத்திய பட்ஜெட் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கருத்தரங்கு கூட்டத்தில் 2021-–22 பட்ஜெட்டில் விவசாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு அறுவடைக்கு பிந்தைய அல்லது […]

செய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம்

எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பங்கேற்பு தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி: பிரதமர் மோடி புகழாரம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கம் சென்னை, பிப்.27– கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மருத்துவப் படிப்புகளில் 30,000 எம்பிபிஎஸ் இடங்களும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைக் கல்வி இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் எம்ஜிஆரின் […]

செய்திகள்

தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் பிரதமர் மோடி: ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

கோவை, பிப்.26- தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று கோவையில் நடந்த விழாவில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். கோவை ‘கொடிசியா’வில் நடந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை வரவேற்று பேசும்போது கூறியதாவது:- ‘‘மக்களுக்காகவே வாழ்ந்து மக்களின் மனம் நிறைந்த மக்களின் மனம் கவர்ந்த மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் வணங்கி இந்த இனிய விழாவில் பங்கேற்று புதுமை திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க […]

செய்திகள்

இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை சந்தித்த மோடி

கோவை, பிப்.26- இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்தார். அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார். அப்போது இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருவரும் கைகூப்பி வணக்கம் செய்துகொள்ளும் புகைப்படத்தை […]

செய்திகள்

தி.மு.க.– காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியாது

தி.மு.க. – காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியாது கோவை,பிப்.26- குடும்ப அரசியலை முன்னிறுத்தும் தி.மு.க. – காங்கிரசால் தமிழகத்தில் நல்லாட்சியை தர முடியாது என்று கோவையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கி பேசினார். பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்தவுடன் வெற்றி […]

செய்திகள்

கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்

கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கோவை, பிப்.26- கோதாவரி–காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை வர்த்தக கேந்திரமாகவும், ஏற்றுமதி மையமாகவும் திகழ்வதால், துபாய்க்கு சென்று திரும்புவதற்கு நேரடி விமான சேவை வாரத்துக்கு ஒரு முறை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கோவை கொடிசியா […]

செய்திகள்

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் சரக்குகளை கையாளும் பூங்கா விரைவில் அமைக்கப்படும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது கோவை விழாவில் பிரதமர் மோடி தகவல் கோவை, பிப்.26- இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மப்பேட்டில் பல்வேறு சரக்குகளை கையாளும் புதிய பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றும் பிரதமர் கூறினார். சென்னையில் […]

செய்திகள்

புதுவைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவோம்: பிரதமர் மோடி உறுதி

* விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே 4 வழிப்பாதை * காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் புதுவை, பிப்.25– என் தலைமையிலான மத்திய அரசு புதுவை மக்களுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். விழுப்புரம்–நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று […]

செய்திகள்

பெண்கள், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்: ஜெயலலிதாவுக்கு மோடி புகழாரம்

டெல்லி, பிப். 24– பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர் ஜெயலலிதா என, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஜெயலலிதாவின் 73’வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி, நினைவு கூர்ந்து டுவிட்டர் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;– “ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகளையும் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றால் […]