சென்னை, பிப்.27– தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த சுமார் ரூ.103 கோடி தேவைப்படுகிறது என்று சட்டசபையில் இன்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதுசம்பந்தமாக ஓ.பன்னீர்செல்வம், 2020–2021–ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகளை, இன்று (27–ந் தேதி) சட்டமன்றப் பேரவை முன் வைத்து பேசியதாவது:– 2020–2021–ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகளை, இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர அவசரத் தேவைகளின் காரணமாக, அரசு கணக்கில் ஏற்பட்ட கூடுதல் […]