கொல்கத்தா, பிப். 3– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி, ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் ஓடிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு […]