செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தருமபுரி, பிப். 15 பொதுமக்களின் தேவையை கண்டறிந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தலம், போடரஅள்ளி, தும்பலஅள்ளி ஆகிய 3 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொத்தலம், போடரஅள்ளி, தும்பலஅள்ளி […]

செய்திகள்

கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.15 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளி விபத்தில் 26 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு ரூ.14.58 லட்சம் நிதி வழங்கினார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார். தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் சபாநாயகர், அமைச்சர்கள் பாராட்டு

சென்னை, பிப். 5– விவசாயிகளின் கூட்டுறவு கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்ததற்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து பேசினார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ […]

செய்திகள்

9.69 லட்சம் மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா: எடப்பாடி வழங்கினார்

சென்னை, பிப்.1– இணைய வகுப்புகள் மூலமாக கல்லூரி மாணவர்கள் கல்வி கற்க வசதியாக 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், கோவிட் பெருந்தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணாக்கர்கள் சிறந்த முறையில் கல்வி கற்றிட, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் […]