சென்னை, ஜன.24-– ‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் […]