செய்திகள்

ரூ.30 கோடியில் கட்டிடங்கள்: எடப்பாடி திறந்தார்; சென்னை அண்ணா நகரில் தொழிலாளர் ஆணையரக வளாகத்திற்கு அடிக்கல்

சென்னை, பிப்.24– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் 29 கோடியே 94 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, சென்னை, அண்ணா நகரில் 17 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள தொழிலாளர் ஆணையரக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாப்பது, அமைதியான தொழில் சூழலை ஏற்படுத்துவது, தொழில்திறன் பெற்ற மனித வளத்தை […]

செய்திகள்

அம்மா மினி கிளினிக்குகளில் நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூர், பிப். 22– 44 அம்மா மினி கிளினிக்குகளில் முதற்கட்டமாக நியமிக்கப்பட்ட 26 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ம.ப. சிவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் கலந்து கொண்டு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 4ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இணையம் வழியாக […]

செய்திகள்

11, 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் வழங்கினர்

திருப்பத்தூர், பிப். 18– திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்புர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ம.ப.சிவன் அருள் தலைமையில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் வழங்கினர். அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது: அம்மா 2011 ஆம் ஆண்டில் ரூ.5500 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்தார். உலகத்திலேயே எங்குமில்லாத வகையில் தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்களில் ரூ.12,110 கோடி […]

செய்திகள்

நாகூர் தர்கா குளத்தின் நான்குபுற தடுப்புச்சுவர்: ரூ.4.34 கோடியில் புதுப்பிப்பு

நிவர், புரெவிப் புயல் – மழை வெள்ளத்தால் சேதமடைந்த நாகூர் தர்கா குளத்தின் நான்குபுற தடுப்புச்சுவர்: ரூ.4.34 கோடியில் புதுப்பிப்பு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் சென்னை, பிப்.5– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா குளத்தின் நான்குபுறத் தடுப்புச் சுவர் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்துக் கட்டப்படும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகூர் […]

செய்திகள்

வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் துவக்கி வைத்தனர் திருப்பத்தூர், ஜன. 25– வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரையிலான 4 புதிய நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் தொடங்கி திருப்பத்தூர், காரப்பட்டு ஊத்தங்கரை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 45 கி.மீ. தூரம் தற்போது உள்ள இருவழிச்சாலை சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலையாக மாற்றியமைக்கும் சாலைப்பணியினை ஜோலார்பேட்டை […]

செய்திகள்

வாணியம்பாடியில் ரூ.6 கோடியில் தோல் மேம்பாட்டு மையம்: எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை, ஜன.23– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (22–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கூட்டு முனைப்பில் முதற்கட்டமாக 6 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் பதனிடுதல் பிரிவுக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 3 கோடியே 34 லட்சம் ரூபாய் […]

செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் துவக்கி வைத்தனர் திருப்பத்தூர், ஜன. 12– திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் துவக்கி வைத்தனர். முதலமைச்சர் ஆணையின்படி திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுமானம் நல வாரியத்தில் உறுப்பிர்களாக உள்ளவர்களுக்கும் கட்டுமான நலவாரியத்தில் […]

செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு: 12.69 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ரூ. 94 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு பச்சரிசி, சிறுபருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு: 12.69 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார் சென்னை, ஜன.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு […]

செய்திகள்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை

திருப்பத்தூர், ஜன. 5– திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையினை கலெக்டர் ம.ப. சிவன் அருள் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர்கபீல் துவக்கி வைத்தனர். நடப்பாண்டின் திருப்பத்தூர் சர்க்கரை ஆலையின் 30 ஆயிரம் மெ.டன் கரும்போடு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை […]

செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திருப்பத்தூர், ஜன. 1– வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 3031 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 20 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளை சார்ந்த 3031 மேல்நிலைபள்ளி மாணவ மாணவிகளுக்கு வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்காயம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளில் +1 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 47 […]