செய்திகள்

ரூ.11 ஆயிரத்து 360 கோடியில் 16 தொழில் நிறுவனங்கள்: எடப்பாடி திறப்பு; அடிக்கல்

காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நாகை, திருப்பூர், கடலூர் உட்பட 11 மாவட்டங்களில் ரூ.11 ஆயிரத்து 360 கோடியில் 16 தொழில் நிறுவனங்கள்: எடப்பாடி திறப்பு; அடிக்கல் 16 ஆயிரத்து 545 பேருக்கு வேலைவாய்ப்பு திருப்பூர், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் கியாஸ் வினியோக திட்டம் சென்னை, அக்.23– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (23–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் […]

செய்திகள்

புறநகர் மின்சார ரெயில்களை மீண்டும் இயக்க அனுமதி: மத்திய ரெயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை, அக். 23 மீண்டும் மின்சார புறநகர் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய ரெயில்வே மற்றும் வணிகத் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதி இருக்கிறார். இது சம்பந்தமாக முதல்வர் எழுதி இருக்கும் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:– ‘இப்போது தமிழ்நாட்டில் மாநிலங்களுக்கு இடையில் ஓடும் ரெயில்கள் மற்றும் மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் பல்வேறு ரெயில்களின் சர்வீசை தென்னக ரெயில்வே துவக்கி இருக்கிறது. இதே […]

செய்திகள்

அனைவருக்கும் அரசு செலவில் கொரோனா தடுப்பூசி: எடப்பாடி பழனிசாமி பேட்டி

தடுப்பூசி கண்டுபிடித்ததும் அனைவருக்கும் அரசு செலவில் கொரோனா தடுப்பூசி: எடப்பாடி பழனிசாமி பேட்டி புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி 32½ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை புதுக்கோட்டை, அக்.23– கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவ கல்லூரி துவங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். நேற்று (22–ந் தேதி), முதலமைச்சர் […]

செய்திகள்

ரூ.2664 கோடி செலவில் கல்லணை கால்வாய் நவீனப்படுத்தப்படும்

மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம் ரூ.2664 கோடி செலவில் கல்லணை கால்வாய் நவீனப்படுத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு கொரோனா தடுப்பு பணியில் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் புதுக்கோட்டை, அக்.23– கல்லணை கால்வாய் ரூ.2,664 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நேற்று (22–ந் தேதி), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுப் […]

செய்திகள்

மாட்டு வண்டியில் எடப்பாடி பயணம்: மராமத்து பணி ஆய்வு

புதுக்கோட்டையில் மாட்டு வண்டியில் எடப்பாடி பயணம்: மராமத்து பணி ஆய்வு விவசாயிகள் உற்சாக வரவேற்பு புதுக்கோட்டை, அக்.22– புதுக்கோட்டையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பயணம் செய்தார். அப்போது விவசாயிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். புதுக்கோட்டையில் நடைபெறும் குடிமராமத்து பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாவட்ட வாரியாக சென்று கொரோனா […]

செய்திகள்

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை: எடப்பாடி பழனிசாமி திறந்தார் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன் என உறுதி புதுக்கோட்டை, அக்.22– புதுக்கோட்டை விராலிமலையில் இன்று ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார். ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழாவில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். வெண்கல சிலையை திறந்து வைத்து […]

செய்திகள்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை: எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

விராலிமலையில் ரூ.351 கோடியில் ஐ.டி.சி. தொழிற்சாலையை திறந்து வைத்தார் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை: எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொரோனா காலத்திலும் ரூ.40,718 கோடி முதலீட்டை ஈர்த்து 55 ஒப்பந்தங்கள் புதுக்கோட்டை, அக்.22– இந்த ஆண்டு புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்திலும் 40 ஆயிரத்து 718 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து […]

செய்திகள்

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும் திட்டங்கள்

* துறைமுகங்கள், * குறைந்த விலையில் வீடுகள் * தொழிற்பூங்காக்கள் * சுற்றுலா திட்டங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும் திட்டங்கள் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை சென்னை, அக்.22– தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யும் திட்டங்கள் பற்றி சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரக உயர் ஆணையருடனான சந்திப்பின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:– தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆழமான தொடர்புகள் உள்ளன. கலாச்சார […]

செய்திகள்

ரூ.25 ஆயிரம் கோடியில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு ரூ.25 ஆயிரம் கோடியில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 49 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் அமைகிறது சென்னை, அக்.22– தமிழகத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் 26 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்துதமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் முதலீடுகளை […]

செய்திகள்

அமித்ஷா பிறந்த நாள்: மலர்க்கொத்துடன் எடப்பாடி வாழ்த்து கடிதம்

சென்னை, அக். 22 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (22ந் தேதி) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிறந்த நாளையொட்டி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:- ‘உங்களுடைய பிறந்தநாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் சீரிய பணியாற்ற, நல்ல ஆரோக்கியமும், அமைதியும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.