செய்திகள்

தூய்மைக்கான தரவரிசை கணக்கெடுப்பு: பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

சென்னை, ஜன.13– மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தூய்மைக்கான மதிப்பீடு – 2021 தரவரிசை கணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைஅமைச்சகத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நகர உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள நகர உள்ளாட்சி […]

செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைப்பு கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் சென்னை, டிச.24– முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016–ன்படி சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் […]

செய்திகள்

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம்: ஜனவரி 1-ந்தேதி முதல் வசூலிக்கப்படும்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம்: ஜனவரி 1-ந்தேதி முதல் வசூலிக்கப்படும் சென்னை, டிச.23- பெருநகர சென்னை மாநகராட்சியில் ஜனவரி 1-ந்தேதி முதல் சொத்துவரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொத்துவரி மற்றும் தொழில்வரி 2 தவணையாக வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலும் […]

செய்திகள்

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கன்டெய்னரில் அமைக்கப்பட்ட “அம்மா மினி கிளினிக்’’

கமிஷனர் பிரகாஷ், ஆர்.எஸ். ராஜேஷ் ஆய்வு சென்னை டிச.22 – ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டை 40 வது வட்டம் புதுவண்ணாரப்பேட்டை எச்.எல்.எல். சுனாமி குடியிருப்பு குடிசை பகுதியில் புதிய முயற்சியாக கண்டெய்னரில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் செயல்பாடு விரைவில் தொடங்க உள்ளதை யொட்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ் ராஜேஷ் ஆகியோர் ஆய்வு செய்துனர். அப்போது மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது: […]

செய்திகள்

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது

சென்னை, டிச.20– சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள காலி இடங்கள், நீர்நிலை ஓரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் ‘மியாவாக்கி’ எனும் அடர்த்தியான மரங்கள் அடங்கிய நகர்ப்புற அடர்வனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கோட்டூர்புரம், வளசரவாக்கம் ராயலாநகர், சோழிங்கநல்லூர் மண்டலம் 197-வது வார்டு மாதிரி பள்ளி சாலை, கே.கே.நகர், மாநகராட்சியின் மணலி மண்டல அலுவலக வளாகம் […]

செய்திகள்

கல்லூரி விடுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை

சென்னை, டிச. 17- ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடியில் இதுவரை 191 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

செய்திகள்

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது: எடப்பாடி பெருமிதம்

* கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு தான் மருத்துவ கல்லூரி சீட் * இந்த ஆண்டு உள் இடஒதுக்கீட்டால் 313 பேருக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது: எடப்பாடி பெருமிதம் நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றபின் 1990 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது சென்னை, நவ.19– ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு இன்று நனவாகி உள்ளது. இந்நாள் தமிழக வரலாற்றில் பொன்னாள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். […]

செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு ‘எம்பிபிஎஸ்’ சீட் கிடைத்தது

நேற்று நடந்த மருத்துவ கலந்தாய்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு ‘எம்பிபிஎஸ்’ சீட் கிடைத்தது சென்னை, நவ.19– நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்தியதால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. நேற்று நடந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் சென்னை மாநகராட்சி நடத்தி வரும் ‘‘சென்னை பள்ளி’’யில் பயின்ற மாணவிகள் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர், படித்த பள்ளியின் […]

செய்திகள்

சென்னையில் 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 39 லட்சத்து 40 ஆயிரம்

* வேளச்சேரியில் அதிக வாக்காளர்கள் – 3,06,189 * துறைமுகத்தில் குறைந்த வாக்காளர்கள் – 1,73,481 சென்னையில் 16 தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 39 லட்சத்து 40 ஆயிரம் சென்னை, நவ.16– சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய […]

செய்திகள்

வடகிழக்கு பருவமழைக்காக வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் நியமனம்

சென்னையில் பாதிப்பு ஏற்படும் 18 இடங்கள் வடகிழக்கு பருவமழைக்காக வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் நியமனம் கமிஷனர் பிரகாஷ் பேட்டி சென்னை, அக்.31- சென்னையில் வடகிழக்கு பருவமழை பணிகளை கண்காணிக்க வார்டுக்கு 5 என்ஜினீயர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் […]