சென்னை, மார்ச் 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72–வது பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ”மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவில்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 72 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின், எல்.ஈ.டி டிவி, பீரோ, கட்டில், மிக்ஸி, கிரைண்டர், கைக்கடிகாரம் உள்ளிட்ட 50 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:– மந்திரங்கள் ஏதும் […]