செய்திகள்

ஈரோட்டில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

ஈரோடு, மார்ச் 1– தமிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading