செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 2வது நாள் ஆட்டத்தில் தடுமாறும் இந்தியா

அகமதாபாத், மார்ச் 5– இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆடி வருகின்றனர். இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. ஏற்கனவே நடந்த முதல் மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், மற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று 2–1 என்ற […]

செய்திகள்

இந்தியா அபார தொடக்கம்: இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

அகமதாபாத், மார்ச் 4– இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் இந்தியா 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அபாரமாக ஆட்டத்தை தொடங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த […]

செய்திகள்

சுழற் பந்துக்கு சாதகமான ஆடுகளம்: வெற்றி பெறுவதே இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம் சுழற் பந்துக்கு சாதகமான ஆடுகளம்:வெற்றி பெறுவதே இலக்கு துணை கேப்டன் ரஹானே பேட்டி அகமதாபாத், மார்ச் 3– இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற் பந்துக்கு சாதகமாகவே அமையும். அந்த போட்டியில் வெற்றி பெறுவதே இந்திய அணியின் இலக்கு என்று துணை கேப்டன் ரஹானே கூறினார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் […]

செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி

அகமதாபாத், மார்ச் 2– இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி […]