சென்னை, பிப். 4– சென்னை ராமாபுரத்தில் சாலையில் ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் பிரபல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள சிக்னல் அருகே சாலையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், 30 தோட்டாக்களும் கிடந்துள்ளது. இதை கண்ட சிவராஜ் என்பவர் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளார். போலீசார் உடனடியாக அதன் உண்மை தன்மை குறித்து அறிய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனை அருகே துப்பாக்கி […]