டேராடூன், ஜூன் 15– உத்தரகண்ட்டில் இன்று அதிகாலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த விமானி உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து இருந்து கேதர்நாத்துக்கு ஆர்யன் ஏவியேசன் ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை (ஜூன் 15 ) ஞாயிற்றுக்கிழமை சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உள்பட 7 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5:20 மணி அளவில் ருத்ரபிரயாக் மாவட்டம், கெளரிகண்ட் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் அந்தப் பகுதியில் […]